Breaking News

மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை! சிவசக்தி ஆனந்தன் கவலை

மக்களின் பிரச்சினைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளினால், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன் வைக்கப்படுகின்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘மாவட்டத்தின் வீதிகள், உட்கட்டமைப்பு, மீள்குடியேற்றம், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி தேவைப்படுகின்றது.

இந்த மாவட்டத்தினுடைய அபிவிருத்திற்கு மத்திய அரசாங்கத்திடம் இருந்து போதிய அளவு நிதி கிடைக்கவில்லை என்பது ஒரு விடயம். மேலும் இந்த மாவட்டத்தில் நிர்வாக சீர்கேடுகளும் காணப்படுகின்றன.’ என்றும் கூறினார்.