Breaking News

ஜெயந்தன் கடத்தபட்படமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம் –த.தே.ம.முன்னணி

இராஜதுரை ஜெயந்தன் என்ற இளைஞர் கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்ட சம்பவத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேற்படி கடத்தல் சம்பவம் தொடர்பில் குடும்பத்தினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சென்று குறித்த சம்பவம் பற்றி கூறி தமது பிள்ளை எங்கே என்று குடும்பத்தினர் கேட்டபோது சாவகச்சேரி பொலீசார் அவ்வாறு தாம் எவரையும் கைது செய்யவில்லை எனக் கூறியுள்ளனர். 

அப்படியாயின் மேற்படி தமது பிள்ளை வெள்ளைவானிலும் மோட்டார் சைக்கிள்களிலும் வந்தவர்களால் கடத்தபட்படமை பற்றிய முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டபோது சாவகச்சேரி பொலீசார் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.

அவ்வாறாயின் மேற்படி கடத்தல் சம்பவம் பொலீசாருக்கு தெரிந்தே நடைபெற்றுள்ளது. பொலீசார் மேற்படி கடத்தல் சம்பவத்திற்கு துணை போயுள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.