மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டால் இலங்கையில் நடந்தது போலவே நிகழும் – ஜோன் கெரி
மக்களின் அடிப்படை உரிமைகள், கௌரவம், சுதந்திரம் என்பன மறுக்கப்படும் போது, என்ன நிகழும் என்பதை,இலங்கையில் காண முடிந்தது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், தயாரிக்கப்பட்டுள்ள ‘நாடுகளின் மனித உரிமைகள் நடைமுறைகள் -2015′ அறிக்கையின் முன்னுரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.“எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் சுதந்திரமாகவும் கட்டுப்பாடுகளின்றியும் வாழ விரும்புகிறார்கள்.
அவர்களுக்கான அடிப்படை உரிமைகள், கெளரவம், மறுக்கப்படும் போது, அவர்கள் கடைசி முடிவாக, தமது தேவைகளுக்காக எழுந்து நிற்பார்கள். இதனை இலங்கை, சிரியா, பர்மா, நைஜீரியாவில் நாம் காண முடிந்தது. சுதந்திரம் என்பது நிலையான சமாதானத்துக்கான அடித்தளமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கை அமெரிக்க காங்கிரசிடம் கையளிக்கப்படும் என்றும் ஜோன் கெரி தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார்.








