Breaking News

‘பனாமா பேப்பர்ஸ்’ நிதி மோசடி – இலங்கையர்களின் விபரம் இன்று அம்பலம்!



சர்வதேச ரீதியில் பெரும் தாக்கததை ஏற்படுத்தியுள்ள ‘பனாமா பேப்பர்ஸ்’ மூலம் வெளிக்கொண்டுவரப்பட்ட நிதி மோசடியாளர்களின் பெயர் பட்டியலில் உள்ளடங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்தவர்களின் பெயர் விவரங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அம்பலப்படுத்தப்படும் என்று ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு அறிவித்துள்ளது.

கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இத்தகவல்களை அம்பலப்படுத்தவுள்ளதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊழல் எதிர்ப்புக் குழுவினால் நிதி சோசடி விசாரணைப் பிரிவு, ஜனாதிபதி ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு ஆகியவற்றுக்கு தாக்கல் செய்துள்ள முறைப்பாடுகளின் தற்போதைய நிலைமை குறித்தும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அம்பலப்படுத்தப்பட்ட பனாமா ஆணவத்தில் இலங்கையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரின் விபரங்கள் உள்ளடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.