தெறி வெளியான 2 நாட்களில் 27 கோடி ரூபா வசூலை கடந்தது (காணொளி இணைப்பு)
விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் வெளியான முதல் 2 நாட்களில் 27.97 கோடி இந்திய ரூபாய்களை தென்னிந்தியாவில் வசூலித்துள்ளது.
விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 14 ஆம் திகதி வெளியான தெறி படம் அட்லீயின் 2 ஆவதும் ஜி.வி.பிரகாஷின் 50 ஆவது படம் என்ற பெருமைகளுடன் வெளியானது.
தெறி வெளியான முதல் 2 நாட்களில் 27.97 கோடி இந்திய ரூபாய்களை தென்னிந்தியாவில் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 20.22 கோடி இந்திய ரூபாய்களை இப்படம் வசூல் செய்திருக்கிறது.படத்தின் முதல் பாதி கேரளாவில் நகர்வது, விஜய் மலையாளம் பேசி நடித்திருப்பது ஆகியவை கேரளாவில் இப்படத்திற்கு பெரும்பலத்தைக் கொடுத்திருக்கின்றன. இதனால் கேரளாவில் மட்டும் இப்படம் 3.75 கோடி இந்திய ரூபாய்களை குவித்திருக்கிறது.
இதேபோல் கர்நாடகா மாநிலத்தில் ரூ 2.70 கோடிகளை இப்படம் வசூல் செய்துள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வேறு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் விஜய் படத்திற்கு 2 மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஒருசில பிரச்சினைகளால் இப்படம் ஒருநாள் தாமதமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெளியானது. இதில் 85 இலட்சம் இந்திய ரூபாய்களை ஆந்திராவிலும், 45 இலட்ச இந்திய ரூபாய்களை தெலுங்கானாவிழும் இப்படம் வசூல் செய்துள்ளது.
தெறி திரைப்படத்தின் விமர்சனத்தை கீழ் உள்ள காணொளி மூலம் பார்க்கவும் -








