Breaking News

"பிர­த­ம­ருக்கு அடி­ப­ணிந்து ஜனா­தி­பதி செயற்­ப­ட­வில்லை''

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை ஆத­ரிப்­ப­வரா இல்­லையா என்­பது எதிர்­வரும் முதலாம் திகதி தெரி­ய­வரும் என மேல்­மா­காண முத­ல­மைச்சர் இசுறு தேவ­பி­ரிய தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­த­ம­ருக்கு பணிந்து செல்­வ­தாக சிலர் குற்றம் சுமத்­து­கின்­றனர். அவ்­வா­றில்லை. ஜனா­தி­பதி சுயா­தீ­ன­மாகச் செயற்­ப­டு­கிறார். அத­னால்தான் வற்­வரி தொடர்பி்ல் அவர் உறு­தி­யான முடி­வினை வெளி­யிட்டார் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

முத­ல­மைச்சர் காரி­யா­ல­யத்தில் நேற்று காலை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மே தினக்­கூட்டம் தொடர்­பா­கவே தற்­போது பேசப்­ப­டு­கி­றது. எந்தக் கூட்­டத்­திற்கு செல்ல வேண்டும் என மக்கள் கேள்வி எழுப்­பு­கின்­றனர். எனினும் அது தொடர்பில் யாரும் அலட்­டிக்­கொள்ளத் தேவை­யில்லை. ஏனெனில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உத்­தி­யோ­க­பூர்வ மே தினக்­கூட்டம் காலி சம­னல மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. குழு­வொன்று கிரு­லப்­ப­னையில் கூட்டம் நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளையும் மேற்­கொண்டு வரு­கி­றது. அக்­கூட்­டத்­திற்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்­குமு் எவ்­வித தொடர்­பு­மில்லை.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில் அதற்கு நீண்ட வர­லாறு உள்­ளது. அது சமூக,சமய,அர­சியல்,கலா­சார விட­யங்­களில் மக்­க­ளுக்கு பொறுப்­புக்­கூ­ற­வேண்­டிய கட்­சி­யாகும். அக்­கட்­சியை எவரும் தங்­களின் சுய விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு பயன்­ப­டுத்த முடி­யாது. எனவே உறுப்­பி­னர்கள் அனை­வரும் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையின் கீழ் ஒன்று சேர்ந்து மே தினத்தை அனுஷ்­டிக்க வேண்டும்.

ஜன­வரி எட்டாம் திகதி ஏற்­பட்ட மாற்­றத்­திற்குப் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் அதி­க­மா­ன­வர்­களை ஒன்று திரட்டும் நிகழ்­வாக மே தினக் கூட்­டத்தை ஏற்­பாடு செய்­துள்ளோம். கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், உள்­ளூ்­ராட்­சி­மன்ற உறுப்­பி­னர்கள், அமைப்­பா­ளர்கள் என அனை­வரும் இணைந்து இக்­கூட்­டத்தை ஏற்­பா­டு­செய்­துள்ளோம். மேலும் கடந்த காலங்­களில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யுடன் இணைந்து செயற்­பட்ட உறுப்­பி­னர்கள் பலரும் இக்­கூட்­டத்தில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

அர­சாங்க எதிர்­பா­ளர்கள் அனை­வரும் கிரு­லப்­ப­னையில் நடை­பெறும் மே தினக்­கூட்­டத்தில் கலந்­து­கொள்­ளு­மாறு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அழைப்பு விடுத்­தி­ருந்­ததை ஊட­கங்கள் மூலம் அறியக் கிடைத்­தது. அவர் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை நேசிப்­பவர் என்றால் கிரு­லப்­பனை கூட்­டத்­திற்குச் செல்­லாது காலியில் நடை­பெறும் கூட்­டத்­திற்கே செல்ல வேண்டும். அவர் ஒரு பிர­ப­ல­மான தலை­வர்தான். எனினும் கட்­சியை இரண்­டாக பிள­வு­ப­டுத்தும் அதி­காரம் அவ­ருக்கு இல்லை. ஏனெனில் கட்­சியின் வளர்ச்­சிக்கு நாம் அவரின் பின்னால் நின்று செயற்­பட்­டுள்ளோம். 2005 மற்றும் 2010 ஆம் அண்­டு­களில் நடை­பெற்ற தேர்­தலின் போது அவரின் வெற்­றிக்­காக பாடு­பட்டோம். எனவே அவர் இப்­போது கட்­சியை இரண்­டாக பிள­வு­ப­டுத்த முனை­வா­ராயின் அதனை அங்­கீ­க­ரிக்க முடி­யாது. இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் அவர் கட்­சியைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­க­ளி­லேயே ஈடு­பட வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு என்­று­மில்­லா­த­வாறு கட்­சியில் சிறந்த இடம் கிடைத்­தி­ருப்­பது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் காலத்­தில்தான். ஏனெனில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் காலத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லுள்­ள­வர்­களை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இணைத்­துக்­கொண்டு அவர்­க­ளுக்கே முக்­கிய பொறுப்­புகள் வழங்­கப்­பட்­டன. அதனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பூர்­வீ­க­மாகக் கொண்­ட­வர்கள் ஒரங்­கட்­டப்­பட்­டனர். தற்­போது அந்­நி­லமை மாற்­ற­ம­டைந்­துள்­ளது. கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு சிறந்த வகி­பாகம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் தேசிய அர­சாங்­கத்தில் முக்­கிய அமைச்­சுகள் சில­வற்­றையும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு பெற்றுக் கொடுத்­துள்ளார்.

ஆகவே எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை இலக்­காகக் கொண்டு நாம் அனை­வரும் ஓர­ணியில் பய­ணிக்க வேண்­டிய தேவை­யுள்­ளது. அவ்­வாறு செயற்­பட்டால் 2020 ஆண்­ட­ளவில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆட்­சி­ய­மைப்­பதை எவ­ராலும் தடுக்க முடி­யாது. 2020 ஆம் அண்டு நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்னர் நடை­பெறும் ஒரே தேர்தல் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்தான். எனவே அத்­தேர்­த­லுக்கு முன்னர் கட்­சியை இரண்­டாகப் பிள­வு­ப­டுத்த எவ­ரா­வது முனை­வா­ராயின், அது ஐக்­கிய தேசியக் கட்­சியை பலப்­ப­டுத்தும் செயற்­பா­டா­கவே அமையும். கடந்த காலங்­களில் ஐக்­கிய தேசியக் கட்சி பல குழுக்­க­ளாக பிரிந்து செயற்­பட்­டது. அதனால் ஆட்­சி­ய­மைக்க முடி­ய­வில்லை. அக்­கு­ழுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்த பின்­னர்தான் அக்­கட்­சி­யினால் தேர்­தலில் வெற்­றி­பெற முடிந்­தது.

இன்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் அக்­கட்­சியை காட்­டிக்­கொ­டுப்­ப­து­மில்லை, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் அக்­கட்­சியை காட்­டிக்­கொ­டுப்­ப­து­மில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­த­ம­ருக்கு பணிந்து செல்­வ­தாக சிலர் குற்றம் சுமத்­து­கின்­றனர். அவ்­வா­றில்லை. ஜனா­தி­பதி சுயா­தீ­ன­மாகச் செயற்­ப­டு­கிறார். அத­னால்தான் வற்­வரி தொடர்பி்ல் அவர் உறு­தி­யான முடி­வினை வெளி­யிட்டார். 

எனவே இரு தலை­வர்­களும் தங்­களின் கட்­சி­களைப் பாது­காத்­துக்­கொண்டு இலக்கு நோக்கிப் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இருந்­த­போ­திலும் சுயநலம்கொண்ட ஒரு சிலரே கட்சினைப் பிளவுபடுத்துவதற்கு சூழ்ச்சி செய்துகொண்டிருக்கின்றனர். கட்சித் தலைவர் யார் என்பதை தீர்மானித்துக்கொண்டு பயணிப்பதை விட தலைவர் யாராக இருந்தாலும் அவருடன் இணைந்து பயணிப்பதே சிறந்தது. சுதந்திரக் கட்சியில் பிரிவினை பேசியது போதும். எனவே எதிர்வரும் மே தினக்கூட்டத்தை சிறந்த முறையில் நடத்துவதற்கு சகல உறுப்பினர்களும் கட்சித் தலைமையோடு ஒன்றிணைய வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிக்கிறாரா இல்லையென்பது எதிர்வரும் முதலாம் திகதி தெரியவரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.