Breaking News

ஒட்டுசுட்டானில் பறவைக்காவடியின்போது உழவு இயந்திரம் விபத்து ; இளைஞர் பலி

முல்லைத்தீவு - அம்பகாமம், மம்மில் பிள்ளையார் ஆலய உற்சவத்தில் பறவைக்காவடி எடுத்து வந்த இளைஞர் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் பலியாகியுள்ளார்.

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றிபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் முத்துஐயன்கட்டைச் சேர்ந்த 26 வயதுடைய வசந்தகுமார் கஜதீபன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.