மூதூரில் தமிழ்-சிங்கள விவசாயிகள் மோதல்
இலங்கையின் கிழக்கே தமிழ்-சிங்கள விவசாயிகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக நேற்று பலமணி நேரம் அங்கு பதற்ற சூழல் நிலவியுள்ளது.
உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆனாலும், கிழக்கு மாகாணத்தில் காணி உரிமை இன்னும் பெரிய பிரச்சனையாகவே உள்ளது என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
காணி பிரச்சினைகள் காரணமாக மூவின மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக உரசல்கள் ஏற்படுகின்றன. அவ்வகையில் நேற்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டம் மூதூர் படுகாடு பகுதியிலும் தமிழ்-முஸ்லிம் விவசாயிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
அங்கு பலமணி நேரங்கள் அமைதியற்ற சூழலை காவல்துறையினரின் கவனத்துக்கு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் கொண்டுசென்ற பின்னர், அங்கு வந்த காவல்துறையினர் இருதரப்பை சமாதானப்படுத்தியுள்ளனர்.
போரின் காரணமாக விவசாயம் செய்யமுடியாமல் போன காணிகளின் உரிமைகளை தமிழ் மற்றும் சிங்கள விவசாயிகள் கோருவதால் அங்கு பிரச்சனை ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் தமது காணி உரிமைகள் மறுக்கப்படுவதாக தமிழ் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.








