Breaking News

முன்னோக்கிச் சென்றுள்ளதாம் இலங்கை மனித உரிமை விடயத்தில் – வருடாந்த அறிக்கை



இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் முன்னோக்கிச் சென்றுள்ளதாக வெளிநாடு மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முக்கியமாக ஓரிரண்டு விடயங்களில் பின்தங்கி இருந்தாலும் பொதுவாக மனித உரிமைகள் என்று பார்க்கின்ற போது முன்னோக்கிச் சென்றுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பாக பல முக்கிய விடயங்களை கையாண்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே இந்த வளர்ச்சி கண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இனங்களுக்கிடையே நல்லுறைவை ஏற்படுத்துதல், மனித உரிமை அமைப்புக்களை அமைத்தல் போன்ற விடயங்கள் முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு மக்கள் சுதந்திரமாக வாழ அவர்களிற்கு முழுமையான கருத்து சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.