கடற்படைக்கு காணி விற்ற யாழ்ப்பானத் தமிழன்?
உயர்பாதுகாப்பு வலயமென ஆக்கிரமிக்கப்பட்ட காணியொன்றை கீரிமலையில் தமிழ் பொதுமகன் ஒருவர் கடற்படைக்கு காணியை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீரிமலை பஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள காணியே கடற்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மானிப்பாயைச் சேர்ந்த கொழும்பு வாசி ஒருவரே கடற்படையினருக்கு காணியை வழங்கியுள்ளார். காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டதா அல்லது விற்பனை செய்யப்பட்டதா என்பது தெரியவில்லையெனவும் காணி உரிமையாளரிற்கும் கடற்படையினருக்கும் நெருங்கிய தொடர்புகளை பேணிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி போராடிவரும் வலி.வடக்கு இடம்பெயர் மக்கள் அவற்றினை படையினருக்கு விற்பனை செய்ய மறுதலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








