புலிகளது தோப்பை புனரமைத்த முப்படைகள்!
தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட மணற்காடு சவுக்கம் காட்டினை புனரமைப்பதில் முப்படைகள் சகிதம் அரச பணியாளர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் களமிறங்கியுள்ளன. சர்வதேச புவி தினமான நேற்று மணற்காடு சவுக்கம் காட்டின் பாதுகாப்பு திட்டம் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.அரச அதிபர் நேரடியாக பங்கெடுத்த இந்நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சவுக்கம் காட்டுப்பகதி துப்புரவு செய்யப்பட்டு நேரடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டின் கீழ் யாழ்ப்பாணம் இருந்த காலப்பகுதியினில் மணல் அரிப்பினை தடுக்க ஆரம்பிக்கப்பட்டதே மணற்காடு சவுக்கம் காடாகும்.
எனினும் அண்மைக்காலமாக சட்டவிரோத கும்பல்கள் விறகு சேகரிக்க ஏதுவாக காட்டிற்கு தீவைத்து வருகின்றன. பெரிய அளிவில் உள்ள இத்தோட்டத்தை கண்காணிக்க ஏதுவாகவே தற்போது சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.








