பொலிஸ் மா அதிபருக்கு வடக்கு முதல்வர் அவசர கடிதம்..!!
வடமாகாணத்தில் குற்றச்செயல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் களவுகள், கொள்ளைகள், நாளாந்தம் இடம்பெற்று வருகின்றன என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடமாகாணத்திற்கு சுற்றுலா வந்த சிங்கள மக்களின் பேரூந்து மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதற்கு தனது அதிருப்தியை இதன்போது முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை ஒரே இரவில் ஐந்து கொள்ளைகள் நடைபெற்றதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இவை இராணுவத்தை தொடர்ந்தும் வடக்கில் வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு முன்னோடியாக திகழ்கின்றனவா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
நாங்கள் யாவரும் இணைந்து போருக்கு பின்னரான எமது மக்களின் பாதுகாப்பை ஊர்ஜிதப்படுத்த வேண்டிய கடப்பாட்டில் உள்ளதாக குறிப்பிட்டு பொலிஸ்மா அதிபரின் முழுமையான உதவியையும் அனுசரணையையும் முதலைமைச்சர் கோரியுள்ளார்.