பொன்சேகாவின் நியமனத்தை ரத்து செய்க- முன்னாள் இராணுவத் தளபதி
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட்டமை அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என தீர்மானத்து அவரது நியமனத்தை ரத்து செய்யுமாறு கோரி முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு மனுக்கனை நாளை (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்தள்ளது.
பொன்சேகாவின் நியமனத்துக்கு எதிராக ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியான சட்டத்தரணி அஜித் பிரசன்ன முன்வைத்த ரீட் மனு மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினல் நேற்று முன்வைக்கப்பட்டதன் பின்னர் இந்த அறிவிப்பை நீதிமன்றம் விடுத்துள்ளது.