Breaking News

வடமாகாண சபை முன் வைத்துள்ள வரைவு தொடர்பில் கலக்கமடைய தேவையில்லை!

வடக்கு மாகாண சபை முன் வைத்துள்ள தீர்வு வரைவு அரசமைப்புக்கு உட்பட்டதா,இல்லையா என்பதே முக்கியம் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேதெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண அரசினால், தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்ட வரைவு கடந்தவெள்ளிக்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.வடக்கு மாகாண சபையின் தீர்வு வரைவை ஏற்பதா, இல்லையா என்பது முக்கியமில்லை.

இது அரசமைப்புக்குப் பொருத்தமா, இல்லையா என்பதுதான் முக்கியம்.வடக்கு மாகாணத்தில் துப்பாக்கிகள் மெளனித்துள்ளன. ஜனநாயகம் மேலோங்கியுள்ளது.தீர்மானம் தொடர்பில் கலக்கமடையத் தேவையில்லை என்று வடக்கு ஆளுநர் மேலும்தெரிவித்துள்ளார்.