ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளம் பெண்கள் : சிசிடிவி காணொளி வெளியானது - THAMILKINGDOM ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளம் பெண்கள் : சிசிடிவி காணொளி வெளியானது - THAMILKINGDOM
 • Latest News

  ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளம் பெண்கள் : சிசிடிவி காணொளி வெளியானது

  வெள்ளவத்­தைக்கும் தெஹி­வ­ளைக்கும் இடைப்­பட்ட பகு­தியில் ரயிலில் மோதுண்டு இரு இளம் பெண்கள் பலியான சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.  இரு இளம் பெண்களும் காதில் இயபோன் மாட்டி இருந்தமையால் ரயில் வருவதையும் அருகில் இருந்தவர்கள் கூச்சமிட்டதையும் கேட்காதமையினால் இந்த கோர விபத்தில் சிக்கினர்.

  பிறந்தநாள் விருந்துபசாரம் ஒன்றிற்கு சென்ற வேளையிலேயே குறித்த பரி­தா­ப சம்­பவம் நடந்துள்ளது.நேற்று முன்தினம் இரு யுவ­திகளும் வெள்ளவத்­தைக்கும் தெஹி­வ­ளைக்கும் இடைப்­பட்ட பகு­தியில் ரயில் கட­வையை கடப்­ப­தற்கு முயற்­சித்தபோது சடு­தி­யாக வந்த ரயிலில் மோதுண்டு உடல் சிதறி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தனர்.

  மரு­தா­னை­யி­லி­ருந்து கொழும்பு கோட்டை ஊடாக களுத்­துறை நோக்கி பய­ணித்த மேற்­படி ரயில் வெள்ளவத்­தையை கடந்து சென்ற வேளையில் குறித்த சம்­பவம் நிகழ்ந்­துள்­ளது.குறித்த இரு யுவதிகளும் 19 வயதுடையவர்களளென்பதுடன் இம் முறை இடம்பெறவிருந்த உயர் தர பரீட்சைக்கு தோற்ற இருந்தனர்.

  வெள்ளவத்தை சில்வா மாவத்தையை சேர்ந்த ஷெரோன் சிவேலினி, களனி பெரேரா மாவத்தையைச் சேர்ந்த ஹிமாசி யாசாரா பெரேரா ஆகிய இருவருமே ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளம் பெண்கள் : சிசிடிவி காணொளி வெளியானது Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top