Breaking News

வடக்கு, கிழக்கில் தனியான நாடாளுமன்றம் கோரும் வடமாகாண சபை?

வட-கிழக்கு மாகாணங்களுக்குத் தனியான நாடாளுமன்றக் கட்டமைப்பொன்றை வலியுறுத்தும் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இம்மாதம் 30ம் திகதி இது தொடர்பான பிரேரணை வடமாகாண சபையில் முன்வைக்கப்படவுள்ளதாக மாகாண சபை நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத் தமிழ் மக்களுக்கு தனியான பிரதேச அலகு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தனியான நாடாளுமன்றக் கட்டமைப்பு என்பன இந்தப் பிரேரணையின் முக்கிய விடயங்களாகும்.

பத்து அம்சங்களைக் கொண்ட இந்தப் பிரேரணையில் வட-கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்குத் தனியான நிர்வாக அலகு குறித்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாளை வடமாகாண சபையில் நிறைவேற்றிக் கொள்ளப்படவுள்ள இந்தப் பிரேரணை அதன் பின்னர் பொதுமக்களின் அனுமதிக்காக முன்வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.