ஜீ.எல்.பீரிஸிற்கு புனர்வாழ்வளிக்கப்படவேண்டும்!
முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு புனர்வாழ்வளிக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடி பொருட்கள், வெள்ளவத்தைக்கு கொண்டுவரப்படவிருந்ததாக ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். இந்த விடயத்தை அவர் முன்னதாகவே அறிந்திருந்தால், ஏன் அதனை பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை எனவும் சிறிதரன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.