Breaking News

புதிய அபிலாஷைகள்,மனவுறுதியுடன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள புது வருடம் வழிசமைக்கும்!



ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து மானிட கௌரவத்தைப் பாதுகாக்கும் கலாசாரப் பல்வகைத் தன்மையை மதிக்கும் ஜக்கியம் மிகுந்த மக்களாக இவ்வாண்டின் சிங்களத் தமிழ் புதுவருடத்தைக் கொண்டாடக் கிடைத்தைமையானது இலங்கையரான நாமனைவரும் பெற்றுக் கொண்ட பாக்கியமாகும் என பிதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சித்திரை புது வருடத்தினை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாக்கியம் மிகுந்த சித்திரை மாதத்தில் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும் சூரியத் திருவிழாவானது இயற்கைக்கும் மனிதனுக்கும் மத்தியில் காணப்படும் அன்னியோன்ய உறவை அர்த்தமிக்கதாக மாற்றக் கூடிய சூரியபகவான் முதலான முழு இயற்கைக்கும் நன்றியைத் தெரிவிக்கும், தேசிய ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் செழுமைப்படுத்தும் மிகப் பெரிய கலாசார திருவிழாவாகக் காணப்படுகிறது.

புதிய அபிலாஷைகள்,மனவுறுதியுடன் வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ளக் கிடைக்கும் சிறப்பான சந்தர்ப்பமாகவும் இது அமைகிறது.

தற்போது அனைவருக்கும் சுதந்திரமாக புதுவருடத்தைக் கொண்டாடக் கூடியதொரு சூழல் நாட்டிலே உருவாகியுள்ளது.

அதற்காக வேண்டி அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவும் இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்கிறேன்.

பெற்றுக்கொண்ட சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைக் கட்டியெழுப்பும் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டத்தோடு ஒன்றிணைந்து செயற்படவும் இப்புதுவருடத்தில் உறுதிபூணுவோம்.

அனைத்து இலங்கையருக்கும் சமாதானம், மகிழ்ச்சி நிறைந்த சுபீட்சம் மிக்கதாக இப்புதுவருடம் அமையட்டும் என பிரார்த்திக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.