வட மாகாணத்தின் சமஷ்டி தீர்மானத்துக்கு பொதுபல கண்டனம்
வட மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட சமஷ்டி முறைமையிலான அரசியலமைப்பு பிரேரணையினால் பொதுபல சேனா அமைப்பு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் பாரிய முயற்சியுடன் தோல்வியடையச் செய்த பிரிவினைவாத முன்னணி, இந்த பிரேரணையினால் மீண்டும் பலம் பெறுவதாக பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த நிறைவேற்றப்பட்டுள்ள முன்மொழிவு, ஒரே நாடாக காணப்படும் இலங்கையை இரு நாடுகளாக உருவாக்குகின்றது எனவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.








