மஹிந்த நாட்டை விட்டு வெளியேறினார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு தாய்லாந்திற்கு பயணமானதாக அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இன்று காலை 7.30 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 890 என்ற விமானத்தில் அவர் தாய்லாந்தின் பாங்கொக்கிற்கு பயணமானார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உட்பட குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர்.
இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ முதன் முறையாக வெளிநாட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.








