Breaking News

92 வயதில் அரசியலில் இருப்பது ஏன்? கருணாநிதியின் அசத்தல் பதில்!



92 வயதைக் கடந்தும் ஏன் இன்னும் அரசியலில் இருக்கிறீர்கள் என பலரும் வினவி வருவதாக கூறிய திமுக தலைவர் கருணாநிதி, அதற்கு அசத்தல் பதிலும் கூறியுள்ளார்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு கருணாநிதி பேசினார்.

அப்போது அவர், சமுதாயத்தை இளைஞர்கள் மட்டுமே உருவாக்க முடியும். தகுதியை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும், இளைஞர்களால் ஆகாதது எதுவுமில்லை.

முன்னேறிய நாட்டையும் சிறந்த சமுதாயத்தையும் உருவாக்க இளைஞர்களால் மட்டுமே முடியும். அவர்கள் தன்னை திருத்தி பின் மக்களைத் திருத்த வேண்டும். ஒரு காலத்தில் நான் இளைஞராக இருந்தேன். இப்போது 92 வயதைக் கடந்து சென்று கொண்டிருக்கிறேன். ஏன் இன்னும் அரசியலில் இருக்கிறீர்கள் என்கிறார்கள். மக்களுக்காக பாடுபடத்தான் இந்த வயதிலும் இருக்கிறேன் என்றார்.

மேலும் இளைஞர்களால் தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும். எனவே, திமுகவில் உள்ள இளைஞர்கள் அதற்கேற்ப தங்களை தயார் செய்து கொண்டு சமுதாய சீர்திருத்தப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.