Breaking News

சம்­பந்தன் வெள்ளியன்று வடக்கு விஜயம்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் எதிர்­வரும் வெள்ளிக்­கி­ழமை வட­மா­கா­ணத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்ளார்.

இதன்­போது வட­மா­கா­ண­ச­பை­யினால் உரு­வாக்­கப்­பட்ட அர­சியல் தீர்வுத் திட்ட வரைபு கைய­ளிக்­கப்­ப­ட­வுள்ள அதே­நேரம் மாகா­ண­ச­பையின் அமைச்­ச­ரவை மாற்றம் குறித்து இறுதி செய்­வ­தற்­கான முக்­கிய பேச்­சு­வார்த்­தை­யொன்றும் இடம்­பெ­ற­வுள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதற்­காக அர­சியல் தீர்வுத் திட்ட முன்­வ­ரை­பொன்றை தயா­ரிப்­ப­தற்­காக வட­மா­காண சபை முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் 19 உறுப்­பி­னர்­களைக் கொண்ட குழுவை நிய­மிக்­கப்­பட்­டது.

அக்­கு­ழு­வினால் தயா­ரிக்­கப்­பட்ட அர­சியல் தீர்வுத் திட்ட முன் வரை­பா­னது கடந்த வியா­ழக்­கி­ழமை மாகா­ண­ச­பையில் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­போதும் இதன் மீதான விவாதம் நாளை செவ்­வாய்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள விசேட அமர்வில் நிறை­வ­டை­ய­வுள்­ள­தோடு இறு­தி­செய்­யப்­ப­ட­வு­முள்­ளது.

பின்னர் மாகாண சபையின் முன் வரை­பா­னது எதிர்­வரும் 16ஆம் திகதி சனிக்­கி­ழமை வடக்­கிற்கு விஜயம் செய்­ய­வுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னிடம் யாழ்.பொது நூல­கத்தில் வைத்துக் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், அவைத் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் சி.தவ­ராசா ஆகியோர் இணைந்து இவ்­வ­ரைபைக் கைய­ளிக்­க­வுள்­ள­தோடு வட­மா­காண பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் அனை­வரும் பிர­சன்­ன­மா­க­வுள்­ளனர்.

அமைச்­சர்கள் மாற்றம் இதே­வேளை நாளைய தினம் வட­மா­காண சபையை எஞ்­சிய இரண்­டரை வரு­டங்­க­ளா­வது வினைத்­திறன் மிக்­க­தாக செயற்­ப­டுத்­த­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி நான்கு மாகாண அமைச்­சர்­களும் மாற்­றப்­ப­ட­வேண்டும். அத்­துடன் அவர்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­த­வற்கு புதிய உறுப்­பி­னர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி வட­மா­காண முத­லை­மைச்­ச­ரிடம் நாளை செவ்வாய்க் கிழமை இடம்­பெ­ற­வுள்ள விசேட அமர்வின் போது மக­ஜ­ரொன்று கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

வட­மா­காண சபையின் பிரதி தவி­சாளர் அன்­டணி ஜெக­நா­தனால் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்ள இக்­கோ­ரிக்கை மக­ஜரில் 16ஆளும் தரப்பு உறுப்­பினர் நேற்றை வரையில் கையெப்­ப­மிட்­டுள்­ளனர். அத்­துடன் முல்­லைத்­தீவு மாவட்டம் யுத்­தத்தால் மிகவும் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­மையைக் கருத்­திற்­கொண்டு அம்­மா­வட்­டத்­தினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் அமைச்­சுப்­ப­த­வி­யொன்று வழங்­கப்­ப­ட­வேண்டும் எனவும் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்­துக்­கட்­சி­க­ளுக்கும் சம­மான அந்­தஸ்து வழங்கி அமைச்­சுப்­ப­த­விகள் பகி­ரப்­ப­டு­வது அவ­சி­ய­மெ­னவும் ஜன­நா­யகக் கோரிக்­கையை கவ­னத்­தி­லெ­டுத்து நட­வ­டிக்­கைகள் வௌிப்­ப­டைத்­தன்­மை­யுடன் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டு­மென அம்­ம­க­ஜரில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அதே­நேரம் வட­மா­காண சபையின் ஆளும் தரப்பில் உள்ள முத­ல­மைச்சர் நான்கு அமைச்­சர்கள் தவிர்ந்து காணப்­படும் 24 உறுப்­பி­னர்­களில் இது மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்கள் இம்­ம­க­ஜரில் கையொப்­ப­மிட்­டுள்­ளமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. வட­மா­காண சபையின் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களும் இம்­ம­க­ஜரில் கையொப்­ப­மிட முன்­வந்­தி­ருந்­த­போதும் அவர்கள் உள்­ளீர்த்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் எதிர்­வரும் 16ஆம் திகதி சனிக்­கி­ழமை வட­மா­காண சபையின் அர­சியல் தீர்­வுத்­திட்ட முன்­வ­ரைபு தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான சம்­பந்­த­னிடம் கைய­ளிக்­கப்­பட்­டதன் பின்னர் வட­மா­காண முத­ல­மைச்சர், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்­களை ஒருங்­கி­ணைப்­பது தொடர்பில் கருத்­துப்­ப­ரி­மாற்­றங்கள் இடம்­பெ­ற­வுள்­ள­தாக தெரி­ய­வரும் அதேேளை இதன்­போது மாகாண சபையின் அமைச்­சர்கள் மாற்றம் குறித்து இறு­தித்­தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­லா­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

முன்­ன­தாக 2013ஆம் ஆண்டு செப்­டம்பர் 21ஆம் திகதி வட­மா­காண தேர்தல் நடை­பெற்­றி­ருந்­த­போதும் மாகாண சபைக்­கான கட்­டத்­தொ­குதி, அமைச்­சர்கள் நியமனம் குறித்த பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருந்தமையால் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியே அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

எனினும் குறித்த முடிவுகளை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இறுதிசெய்தாக கூறப்பட்போதும் முதல் இரண்டரையாண்டுகாலப்பகுதிக்கே இந்நியமனங்கள் வழங்கப்படுவதாகவும் அதன் பின்னர் அது மாற்றப்படுமென்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இன்று திங்கட்கிழமையுடன் வடமாகாணசபை தனது இரண்டரையாண்டு காலப்பகுதியை பூர்த்திசெய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.