பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்மொழிவு வரைவு நிறைவேற்றம்
தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வின் முன்மொழிவு வரைவு தீர்வுத்திட்டம் ஏகமனதாக வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தகவலை தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய வைத்திய கலாநிதி ப.லக்ஸ்மன் தெரிவித்தார்.தமிழ் மக்கள் பேரவையின் நான்காவது அமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே லக்ஸ்மன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதன் அச்சுப் பிரதிகளையும் மிக விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார்.








