கச்சதீவை மீட்டு பாரம்பரிய மீன்பிடி உரிமையை பெற்றுக்கொடுப்பேன்! - ஜெயலலிதா
கச்சதீவை மீட்டு பாரம்பரிய மீன்பிடி உரிமையை பெற்றுக்கொடுக்கப்போவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்த விடயத்தை தமது தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கச்சதீவை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு இந்திய மத்திய அரசாங்கம் தாரைவார்க்க முடிவு செய்தபோது அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மௌனமாக இருந்ததாக ஜெயலலிதா குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும், தாம் முதலமைச்சராக பதியேற்ற பின்னர் கச்சதீவை மீட்டு பாரம்பரிய மீன்பிடி உரிமையைபெற்றுக்கொடுப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ மீனவர்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தி கைதுசெய்வதாக குறிப்பிட்ட அவர், மீனவர்களின் படகுகளை விடுவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.








