புலனாய்வு பிரிவு செயற்பட வேண்டும் – மஹிந்த
அரசு என்ற வகையில் மிகவும் ஆழமான அவதானத்துடன் புலனாய்வு துறை இயங்க வேண்டுமெனவும் யுத்தம் இடம்பெறவில்லை என்றாலும் புலனாய்வு பிரிவு செயற்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை கேடம்பே விகாரைக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு எரிவித்தார்.
இதேவேளை தற்பொழுது புலனாய்வு பிரிவினரின் சிலர் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் கிளிநொச்சியில் உத்தியோகபூர்வமான பணி இல்லாமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். சாவகச்சேரி பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி தொடர்பில் தான் பிரதமருடன் தொலைபேசியில் கேட்டறிந்ததாகவும், அது தொடர்பாக விசாரணை செய்து பின்னர் தெரிவிப்பதாக பிரதமர் தெரிவித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.