வேலனை பிரதேச செயலரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோரி போராட்டம்
யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை கண்டித்தும் அவருடைய பதவிக்காலத்தை நீடிக்க வலியுறுத்தியும் இன்று (சனிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் தீவக வலயத்திற்குட்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வேலணை பிரதேச செயலாளராக கடமையாற்றிவரும் மஞ்சுளாதேவி, அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் நிறைவடைவதற்கு முன்பாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதனால் அவருடைய பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க வேண்டும் என இதன்போது பொதுமக்கள் அரசாங்க அதிபரை வலியுறுத்தியிருந்தனர்.