Breaking News

சிங்களவர்கள் நிம்மதியாக வாழ உளப்பூர்வமான தீர்வே வழங்க வேண்டும்!- ஜனாதிபதி

சிங்­கள பௌத்­தர்கள் நிம்­ம­தி­யாக வாழ வேண்­டு ­மானால் தமிழ்­மக்­க­ளி­னதும் முஸ்­லிம்­க­ளி­னதும் அனைத்­துப்­பி­ரச்­சி­னை­களும் உளப்­பூர்­வ­மாகத் தீர்க்­கப்­பட வேண்டும். இதுவே ஒரே வழி என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

நாட்டு மக்­க­ளுக்குத் தேவை­யா­ன­தையே நாம் வழங்க வேண்டும். நாட்டை முன்­னோக்கிக் கொண்டு செல்­ல­வேண்­டி­யது அவ­சியம். அத­னை­வி­டு­த்து நாட் டைப் பிரிப்­ப­தற்கு முயற்­சிக்­கி­றார்­க­ளென பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு பிரச்­சினை தீர்ப்­ப­தற்கு தடை­யாக இருக்­க­கூ­டாது. தெற்கில் உள்ள அடிப்­படை வாதி­களே இவ்­வா­றான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர். நிலை­யான சமா­தா­னத்தை வழங்­கு­வ­தற்கு அனை­வரும் ஒன்­றி­ணை­யு­மாறு அழைப்பு விடுக்­கிறேன் என்றும் ஜனா­தி­பதி கூறினார்.

ஏறா­வூரில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள ஆடைத்­தொ­ழிற்­சா­லையை திறந்­து­வைக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே இவ்­வாறு தெரி­வித்தார். கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஷீர் அஹமட் தலை­மையில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்­பட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொண்­டனர்.

இங்கு ஜனா­தி­பதி தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

இந்தப் பிர­தேசம் எனக்கு புதி­ய­தல்ல. உங்­க­ளு­டைய மாவட்­டத்­திற்கு அடுத்த மாவட்டம் தான் என்­னு­டை­யது. நான் பிறந்­ததும் வாழ்ந்­ததும் அடுத்த மாவட்­டத்­திலே தான். பாட­சா­லைக்கு செல்லும் போது இந்த பகு­திக்கு வந்­துள்ளேன். கல்வி கற்கும் போது நண்­பர்­க­ளுடன் இணைந்­து­து­விச்­சக்­கர வண்­டியில் இம்­மா­வட்­டத்­திற்கு வருகை தந்­துள்ளேன்.

30ஆண்­டு­க­ளாக எனக்கு தெரிந்த அனு­ப­மான பிர­தேசம் இது­வாகும். கடந்த ஜன­வரி 8ஆம் திகதி நடை­பெற்ற தேர்­தலில் நீங்கள் எனக்கு பாரிய ஒத்­து­ழைப்பை வழங்­கி­னீர்கள். இந்த நாட்டில் மாற்றம் ஒன்­றினை உரு­வாக்­கு­வ­தற்­காக நீங்கள் வழங்­கிய ஆத­ர­வுக்கு எனது மனப்­பூர்­வ­மான நன்­றிகள்.

எனக்கு வாக்­க­ளித்த மக்கள் வேண்­கோ­ளொன்றை விடுத்­தார்கள். அவர்கள் தமது வேண்­டு­கோளில் உணவோ உடையோ இல்­லை­யென்று கூற­வில்லை. எமக்கு உணவு உடை இருந்­தாலும் சுதந்­த­ர­மாக வாழக்­கூ­டிய சூழ­லையே உரு­வாக்­கித்­தா­ருங்கள் என்றே சொன்­னார்கள்.

சிங்­கள தமிழ் முஸ்லிம் மக்கள் பயந்­துடன் வாழ்ந்த காலம் உள்­ளது. சுதந்­தி­ர­மாக வாழ­வில்லை. சுதந்­தி­ர­மாக தொலை­பே­சியில் கூட பேச­வில்லை. தொலை­பே­சியில் பேசும் போது கூட இர­க­சி­ய­மா­கவே பேசி­னார்கள். தமது உரை­யா­டல்கள் பதிவு செய்­யப்­ப­டு­கின்­ற­தென பயந்­தார்கள்.

இந்த நாட்டு மக்கள் சுதந்­தி­ர­மாக பேசக்­கூ­டிய நிலை இருக்­க­வில்லை. யுத்தம் நிறை­வ­டைந்த பின்­னரும் அச்­ச­மான சூழலே காணப்­பட்­டது. அவ்­வா­றான நிலையில் சமா­தா­னத்தை உரு­வாக்­கு­வ­தற்கு மக்கள் மிகவும் கஷ்­டப்­பட்­டார்கள். சமா­தா­னத்தை பற்றி நீண்­ட­கா­லத்­திற்கு நி்லை நிறுத்­திக்­கொள்­ள­வேண்டும். துப்­பாக்­கி­யினால் நீண்ட சமா­தா­னத்தை உரு­வாக்க முடி­யாது.

நாட்டு மக்கள் மனதில் பல்­வேறு பிரச்­சனை உள்­ளன. அவர்­களின் உள­ரீ­தி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­த­மான தீர்வை வழங்­க­வேண்டும். யுத்­த­கா­லத்தில் எந்த மக்கள் இன, மத, பேத­மின்றி மடிந்­தார்கள். யுத்தம் நிறைந்த பின்னர் நிம்­ம­தி­யாக வாழலாம் என்று கனவு கண்­டார்கள். எனவே மீண்டும் யுத்தம் எற்­ப­டாத நிலை­மையை உரு­வாக்­க­வேண்டும். நாட்டில் நிலை­யான சமா­தா­னத்தை உரு­வாக்கும் பாரிய பொறுப்பு அனை­வ­ருக்கும் உள்­ளது.

நீங்கள் இருக்கும் இந்த கிழக்கு மாகா­ணத்தில் சூரியன் உதிக்­கின்­றது. தென்­மா­கா­ணத்தில் சூரியன் மறை­கின்­றது. கிழக்கு மகா­ணத்­திற்கும் மேற்கு மாகா­ணத்­திற்கும் வித்­தி­யாசம் உள்­ளது. இந்த வித்­தி­யா­சத்தை காண்­பது சூரியன் பகவான் மாத்­திரம் தான் அவர் தான் நன்­றாக எடுத்து கூறுவார்.

கிழக்கு மகா­ணத்­தி­னதும் மேற்கு மகா­ணத்­தி­னதும் அபி­வி­ருத்தி சம­மாக உள்­ளதா? மக்கள் பொரு­ளா­தார நிலைமை சம­மாக உள்­ளதா? கல்வி வச­திகள் சம­மாக உள்­ளதா? சுகா­தார சேவை ஒரே மாதி­யாக வழங்­கப்­ப­டு­கின்­ற­னவா? பொதுப் போக்­கு­வ­ரத்து வசதி சம­மாக உள்­ளதா? பிரச்­சி­னை­களை பார்க்­கையில் வேறு­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றானால் இந்த பிரச்­சி­னையை நாம் புரிந்து கௌ்ளவேண்டும்.

இது கால­நிலை பற்­றிய பிரச்­சனை அல்ல. ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தை பொறுத்­த­வ­ரையில் கஷ்­ட­மான, வெப்­ப­மாக நாடு. அப்­ப­கு­தியை பாலை­வனம் என்று சொல்­லு­கிறோம். அது முன்­னேற்றம் அடைந்­துள்­ளது. வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு என்ற வேறு­பாடு இல்லை. அனைத்து மாகா­ணங்­களும் ஒரே­மா­தி­ரி­யாக அபி­வி­ருத்­தி­டை­ய­வேண்டும்.

அனைத்து மாகா­ணங்ளும் சம­மாக காணப்­ப­ட­வேண்டும். இவ்­வி­த­மான வேறு­பா­டின்றி சந்­தே­ச­மாக வாழ்­வ­தற்­கா­கவே எங்­க­ளது அர­சாங்­கத்தை தேர்ந்­தெ­டுத்­துள்­ளீர்கள். மீண்டும் துப்­பாக்­கியை ஏந்­து­வ­தற்கு இட­ம­ளிக்க கூடாது. அனைத்து மாகா­ணங்­களும் சம­மான அபி­வி­ருத்தி செய்­யப்­பட வேண்டும்.

மக்கள் அனை­வரும் சந்­தோ­ச­மாக வாழும் சூழலை நாம் உரு­வாக்க வேண்டும். சிங்­கள மக்கள் வாழ வேண்­டு­மானால் தமிழ் முஸ்லிம் மக்­களின் அனைத்­துப்­பி­ரச்­ச­னை­களும் தீர்க்­கப்­பட வேண்டும். அனை­வரும் தங்­க­ளு­டைய பொறுப்பை சரி­யாக நிறை­வேற்ற வேண்டும்.

அவ்­வா­றான செயற்­பா­டு­களை நாங்கள் முன்­னெ­டுக்கும் போது தென்­னி­லங்­கை­யி­லுள்ள சில கடும்­போக்­கா­ளர்கள் நாங்கள் இந்த நாட்டைப் பிரிக்­கப்­போ­கின்றோம் என்றும் காட்டிக் கொடுக்­கப்­போ­கின்றோம். சர்­வ­தே­சத்­துக்கு அடி­ப­ணிய வைக்­கப்­போ­கின்றோம் என்று கூறு­கின்றோம் என்று பிர­சாரம் செய்­கின்­றார்கள். விமர்­சிக்­கின்­றார்கள்.

அவ்­வாறு விமர்­சிக்­கின்­ற­வர்­க­ளை­விட இந்த நாட்டைப் பற்றி எங்­க­ளுக்கு அதிக அக்­கறை இருக்­கின்­றது. எனவே எதி­ராகப் குர­லெ­ழுப்பி பிர­சாரம் செய்­வதை விடுத்து விமர்­சிப்­பதை விடுத்து இந்த நாட்டை அபி­வி­ருத்தி செய்து சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக அனை­வரும் ஒன்­றாக கைகோர்க்க வேண்டும். அனை­வரும் சமா­தா­னத்­துடன் வாழ்வோம். நாட்டை மீண்டும் பிரிக்கச் சென்றால் கண்ணீர் வரு­வ­தற்கு நேரிடும்.

எல்­லோரும் பிரச்­சி­னையை புரிந்து அதனை தீர்ப்­ப­தற்­காக செயற்­பட வேண்டும். எல்­லோரும் ஒரே நோக்­கத்­திற்­காக செயற்­பட முடி­யு­மென பௌத்த தத்­துவம் சொல்­கின்­றது. அர­சாங்­கங்கள் தொடர்ந்து பய­ணிக்க முடி­யாது என்­கின்­றார்கள். அவர்­க­ளு­டைய கனவு ஒரு­போதும் நன­வா­காது.அர­சாங்­கத்­தினை வீழ்த்­து­வ­தற்கு போரா­டு­வதை விட இருக்­கின்ற அர­சாங்­கத்­துடன் இணைந்து போரா­டு­வ­தற்கு அழைப்பு விடு­கின்றேன்.

2030ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் எவ்­வாறு இருக்­க­வேண்டும் தொலை­நோக்கை அறி­மு­கப்­ப­டுத்­தி­யைப்­போன்று முழு­நாடும் இலக்கை அடை­ய­வ­தற்கே அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது. இங்­கு­வேலை செய்யும் பெண்­களை பார்க்­கையில் மிகவும் சந்­தோ­ச­மா­க­வுள்­ளது. அவர்கள் மத்­தியில் இன­ம­த­மின்றி செயற்­ப­டு­கின்­றார்கள்.

கிழக்கு மாகாண சபை நல்­லி­ணக்­கத்தை சான்­றாகத் திகழ்­கி­றது. அந்த அமைப்பை சக்­தி­ம­யப்­ப­டுத்த வேண்டும். அர­சாங்கம் என்ற வகையில் அதற்­கான முழு­மை­யான ஆத­ர­வையும் வழங்­குவோம்.பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்தி உற்­பத்­தியை மேம்­ப­டுத்த வேண்டும். இந்த நாட்டில் எல்­லாத்­து­றை­யி­னரும் சேவை­யாற்ற வேண்டும்.

நேர்­மை­யாக அர்ப்­ப­ணிப்­புடன் சேவை செய்ய வேண்டும். பொது­வான இலக்கு இருக்­கின்­றது. நாளைய நாளை நல்ல நாளாக மாற்­றுவோம். உல­கத்தில் பல நாடுகள் அவ்­வாறே முன்­னே­றி­யுள்­ளன. நாளை பிறக்கும் பிள்­ளை­க­ளுக்­காக புதிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­யது நமது கடமை என்றார்.

இதே­வேளை சுமார் ஐயா­யிரம் குடும்­பங்­க­ளுக்கு நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் வாழ்­வா­தா­ரத்தை வழங்கக் கூடிய ஆடைத் தொழிற்­சாலை மற்றும் கைத்­த­றித்­தொ­ழிற்­சாலை திறந்து வைக்­க­கப்­பட்­டுள்­ளது.

நல்­லாட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் கிழக்கு மாகா­ணத்தில் பொரு­ளா­தார அபி­வி­ருத்தித் திட்­ட­மொன்று ஜனா­தி­ப­தியால் ஆரம்­பித்து வைக்­கப்­ப­டு­வது இதுவே முதன் முறை­யாகும்.

இத்தொழிற்சாலை மட்டுமே தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக மூவினங்களையும் சேர்ந்த 3000 குடும்பங்களும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வறுமை ஒழிப்புக்காக தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் கனவை நனவாக்கும் நோக்குடன் ஏறாவுரில் 6 தொழிற்சாலைகள் திட்டம் அமுலாகிறது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி திட்டமிடல் அமைச்சர் ரவுப் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.