தமிழரின் தலைமகனுக்கு அகவை 76
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று 23 ஆம் திகதி 76 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். 1939 அக்டோபர் 23 ஆம் திகதி பிறந்த இவர், கொழும்பு றோயல் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு சட்டக்கல்லூரியிலும் படித்தவர்.
1979 இல் சட்டத்துறையில் இணைந்த இவர், நாட்டின் பல பகுதிகளிலும் நீதிபதியாகப் பணியாற்றினார். 2001 இல் உச்ச நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்ற இவர், 2004 ல் ஓய்வு பெற்றார். வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்ட இவர், 2013 அக்டோபரில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.








