பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டாலும் புலிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்!
பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கப்பட்டாலும் கடுமையான குற்றச்சாட்டுக்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள “விடுதலைப் புலி” உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டம் அரசியல் பழிவாங்கல்களுக்காகவே பயன்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர்கள் மங்கள சமரவீர மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும். ஆனால் அதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு அமைவானதாக புதிய சட்டம் ஏற்படுத்தப்படும்.
இது தொடர்பாக சட்டங்களைத் தயார்படுத்துவது தொடர்பில் இலங்கைச் சட்ட ஆணைக்குழு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதேவேளை பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டாலும் கடுமையான குற்றங்களைப் புரிந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டம் அரசியல் பழிவாங்கல்கள் நடவடிக்கைகளுக்காகவே பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்.








