சம்பந்தனுக்கும் எனக்கும் எவ்வித பனிப்போரும் இல்லை! - முதல்வர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், தனக்கும் இடையே எவ்விதமான பனிப்போரும் இல்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். கல்வி வலயத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நடத்தப்பட்ட ஆசிரியர் மாநாடு – 2016 இல் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, உரையாற்றிவிட்டு திரும்பும் நிலையில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வட மாகாண சபையினால் பரிந்துரைக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பிலான இறுதி அறிக்கையை, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கையளிக்கும் நிகழ்வு இரு தடவைகள் முதலமைச்சரின் சுகயீனம் காரணமாக பிற்போடப்பட்ட நிலையில், அது தொடர்பில் தேவையற்ற ஊகங்கள் எழுந்திருந்த நிலையிலேயே, விக்னேஸ்வரன் இந்த தெளிவு படுத்தலை வழங்கியுள்ளார்.








