Breaking News

தமிழீழ படுகொலைகள் வாரம் இன்று ஆரம்பம்



தமிழீழ படுகொலைகள் வாரம் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 1948 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற படுகொலைகளை நினைவு கூர்ந்து தமிழீழ படுகொலை வாரம் நாளை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அனுஸ்டிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய இன்று வியாழக்கிழமை செம்மணி புதைகுழி பகுதியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்படும் எனத் தெரிவித்த அவர், தமிழர் தாயகம் எங்கும் அனுஸ்டிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.