Breaking News

ரயில் மோதி இளம் பெண் பலி: சுன்னாகத்தில் சம்பவம்



காங்கேசன்துறையிலிருந்து யாழ். நோக்கி வந்த ரயில் மோதியதில் இளம் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இரவு 8 மணியளவில் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சுன்னாகம் சபாபதிபிள்ளை வீதியைச் சேர்ந்த லோரன்ஸ் றெமின்சினா (வயது 18) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் விபத்தா? அல்லது தற்கொலையா? என்பது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, நேற்று விடிகாலையில் கோண்டாவில் ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் படுத்திருந்த இரண்டு இளைஞர்கள் ரயிலில் நசியுண்டு பலியாகியுள்ளனர்.

இவர்களது மரணம் தொடர்பில் பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், உண்மை நிலவரம் என்ன என்பதைக் கண்டறியும் விதமாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.