Breaking News

மகிந்தவை சித்திரவதை செய்யும் விளையாட்டு செயலி – கூகுளில் அறிமுகம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சித்திரவதை செய்யும், அன்ட்ரொயிட் விளையாட்டு செயலி ஒன்று, கூகுளில் அறிமுகமாகியிருக்கிறது.


“Torture Him” என்ற பெயரில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த விளையாட்டு செயலியை, தரவிறக்கம் செய்து கொண்டு. மகிந்த ராஜபக்சவைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளவருக்கு சித்திரவதைகளை மேற்கொள்ள முடியும்.

குத்துச்சண்டையில் குத்துவது போன்று குத்தவது, காலணிகளால் தாக்குவது, ஊசிகளால் குத்துவது, மின்சார அதிர்ச்சி அளிப்பது, தூக்கில் தொங்க விடுவது போன்ற பல்வேறு சித்திரவதைகளை இந்த விளையாட்டின் மூலம் மேற்கொள்ள முடியும்.

கடந்த 2016 ஜனவரி 10ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை, சுமார் 1 இலட்சம் வரையான பயனர்கள் தரவிறக்கம் செய்துள்ளனர்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவை ஒத்த உருவத்துக்கு சித்திரவதைகளை மேற்கொள்ளும் இந்த விளையாட்டு செயலிக்கு, எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.