Breaking News

4 ஆண்­டு­க­ளுக்கு அர­சாங்­கத்தை யாராலும் அசைக்­கவே முடி­யாது

அர­சாங்கம் தற்­போது முன்­னெ­டுத்­து­வரும் ஜன­நா­யக செயற்­பா­டுகள் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்க நல்­ல­தொரு சந்­தர்ப்­ப­மாக அமைந்­துள்­ளது. இந்த செயற்­பா­டுகளின் மூலம் அர­சியல் தீர்வு ஒன்றை நிரந்­த­ர­மாக பெற்­று­கொள்­ளவும் முடியும் என அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.

சிலர் இன­வா­தத்தை பரப்பி ஆட்­சியை கவிழ்க்க முயற்­சித்து வரு­கின்­றனர். ஆனால் இவர்கள் என்ன சூழ்ச்­சி­களை மேற்­கொண்­டாலும் அடுத்த நான்கு ஆண்­டு­க­ளுக்கு இந்த ஆட்­சியை அசைக்­கக்­கூட முடி­யாது எனவும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தல் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்பை உருா­வக்கும் நோக்கில் பாரா­ளு­மன்­றத்தில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள மனித உரி­மைகள் ஆலோ­சனைக் குழுவின் தலை­வ­ராக என்னை நிய­மித்­துள்­ளனர். கடந்த காலத்தில் மனித உரி­மைகள் பாது­காப்பு சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வை­கப்­பட்­டுள்­ளது. ஆனால் இறு­தியில் அவற்­றிற்கு என்ன ஆனது என்­பது எவ­ருக்­குமே தெரி­யாது. எவ்­வா­றி­ருப்­பினும் இம்­முறை மனித உரி­மைகள் சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றி­யா­க­வேண்டும் என நிலைப்­பாட்டில் நம் உள்ளோம்.

அதேபோல் 19ஆவது திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அதி­காரப் பகிர்வு மற்றும் சுயா­தீன ஆணைக்­குழு நிய­மனம் என்ற விட­யங்­களை நாம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­மை­யா­னது எமக்குக் கிடைத்த மிகப்­பெ­ரிய வெற்­றி­யாகும். ஆட்­சியில் இருக்கும் ஒரு அதி­கா­ர­மிக்க தலைவர் தனது அதி­கா­ரங்­களை குறைக்க இணக்கம் தெரி­வித்­த­மையும் அதி­கா­ரங்­களை சமப்­ப­டுத்தி பாரா­ளு­மன்­றத்தை பலப்­ப­டுத்­தி­ய­மை­யுமே நாம் ஜன­நா­ய­கத்தை வெற்­றி­கொண்­ட­துக்கு சிறந்த சான்­றாகும்.

அதேபோல் சர்­வ­தேச மட்­டத்தில் எமக்கு இருந்த அழுத்­தங்கள், சிக்­கல்கள் அனைத்­திலும் இருந்து நாம் எம்மை பாது­காத்துக் கொள்­ளவும், சர்­வ­தேச நாடு­களை நாம் நட்பு நாடு­க­ளாக்­கிக்­கொள்­ளவும் இந்த கார­ணி­களே சாத­க­மாக அமைந்­தன.

ஆட்­சி­மாற்றம் கூட எமக்கு நல்­ல­தொரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது. கடந்த காலத்தில் எம்­மீது இருந்த குற்­றச்­சாட்­டு­களை நிவர்த்­தி­செய்து கொள்­ளவும், அடுத்­த­கட்ட நகர்­வு­களை நோக்கி பய­ணிக்­கவும் நல்­ல­தொரு வாய்ப்­பாக அமைந்­தது. அவ்­வா­றான நிலையில் தற்­போது நாம் முன்­னெ­டுத்­து­வரும் ஜன­நா­யக செயற்­பா­டுகள் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கவும் நல்­ல­தொரு சந்­தர்ப்­ப­மாக அமையும். அதன் மூலம் அர­சியல் தீர்வு ஒன்றை நிரந்­த­ர­மாக பெற்­று­கொள்­ளவும் சாத்­தியம் உள்­ளது.

எமது ஜன­நா­யக செயற்­பா­டுகள் அனைத்­தையும் விமர்­சிக்­கவும், தடுக்­கவும் ஒரு சிலர் முயற்­சித்து வரு­கின்­றனர். இன­வா­தத்தை பரப்பி ஆட்­சியை கவிழ்க்­கவும் முயற்­சித்து வரு­கின்­றனர். ஆனால் இவர்கள் என்ன சூழ்ச்­சி­களை மேற்­கொண்­டாலும் அடுத்த நான்கு ஆண்­டு­க­ளுக்கு இந்த ஆட்­சியை அசைக்­கக்­கூட முடி­யாது. நாம் இப்­போது குறை­களை நிவர்த்­தி­செய்­யவே அதிக காலம் எடுக்­கின்றோம். அடுத்­த­தாக ஜன­நா­யக செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்தும் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுப்போம்.

இப்­போது இவர்கள் பாரா­ளு­மன்­றத்­திலும், ஊடக சந்­திப்­பு­க­ளிலும் நடந்­து­கொள்­வ­தைப்­போல இனியும் நடந்­து­கொள்ள முடி­யாது. இப்­போதே மக்­க­ளுக்கு இவர்­களின் உண்­மை­யான தோற்றம் விளங்­கி­யுள்­ளது. மக்­களின் பிர­தி­நி­திகள் என்று கூறிக்­கொண்டு பாரா­ளு­மன்­றத்தில் அடி­த­டியில் ஈடு­படும் இவர்­களை அடுத்த தேர்­தலில் மக்கள் விரட்­டி­ய­டிப்­பார்கள். 

ஆகவே ஆட்சி முடியும் நிலையில் அடுத்த தேர்தல் வரும் போது இந்த அரா­ஜ­கக்­கா­ரர்கள் ும் நடந்­து­கொள்­வ­தைப்­போல இனியும் நடந்துகொள்ள முடியாது. இப்போதே மக்களுக்கு இவர்களின் உண்மையான தோற்றம் விளங்கியுள்ளது. மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு பாராளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபடும் இவர்களை அடுத்த தேர்தலில் மக்கள் விரட்டியடிப்பார்கள். ஆகவே ஆட்சி முடியும் நிலையில் அடுத்த தேர்தல் வரும் போது இந்த அராஜகக்காரர்கள் இருக்கமாட்டர்கள் என்றார்.