கிளிநொச்சியில் இனந்தெரியாத நபர்களால் பேரூந்துக்கு தீ வைப்பு
கிளிநொச்சி மாயவனூர் பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரூந்து ஒன்று இனந்தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட பேரூந்து எரிக்கப்பட்ட நிலையில், முற்றாகச் சேதமடைந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








