Breaking News

மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு இன்று முதல் நீக்கம்!



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் நீக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்சவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த 102 இராணுவத்தினர் நீக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் நீக்கப்படுவார்கள் என கடந்த மாத முற்பகுதியில் அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் கடந்த மாதம் 6 ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு 103 இராணுவத்தினர் மற்றும் 103 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்தது.

இந்நிலையிலேயே இன்று திங்கட்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.