வடமாகாணசபையின் தீர்வுத்திட்ட வரைபு அடுத்த வாரம் சம்பந்தனிடம் கையளிக்கப்படும்!
வடமாகாண சபையின் தீர்வுத்திட்டத்தை தாம் அடுத்த வாரம் கொழும்புவிற்கு செல்லும் போது தானும் தன்னுடம் வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தலைவர் எல்லோருமாக சம்மந்தன் ஜயாவிடம் நேரில் சென்று கொடுக்கவுள்ளதாக வடமாகாணமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .
தனது உடல்நிலை சரியில்லாமை காரணமாகவே கடந்த இரண்டு தடவைகளும் சம்மந்தன் ஜயாவிடம் கொடுக்க என்று எடுத்த முடிவுகள் தள்ளிப்போனதே தவிர அவருக்கும் தனக்கும் எந்தவித முரண்பாடுகளோ இல்லது பிரச்சினைகளோ இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.








