Breaking News

புலம்பெயர் புலிகள் தன்னை கொலை செய்வார்கள் என்ற பயத்தில் மகிந்த!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ சாதா­ரண பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராவார். எனவே அவரை கொலை செய்ய வேண்­டிய எந்­த­வொரு தேவைப்­பாடும் புலம்­பெயர் அமைப்­பி­ன­ருக்குக் கிடை­யாது. அவ்­வாறு கொலை செய்­யப்­ப­டு­வ­தாயின் ஜன­வரி 8 ஆம் திகதி அல்­லது ஆகஸ்ட் 17 ஆம் திக­தி­க­ளுக்கு முன்பே கொலைசெய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும் என சமூக வலு­வூட்டல் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராம­நா­யக்க தெரி­வித்த்துள்ளார்.

உலகின் பலம் வாய்ந்த தீவி­ர­வாத இயக்­கங்­க­ளான ஐ.எஸ், அல் கைதா போன்­ற­வைகள் கூட முன்னாள் ஜனா­தி­ப­தி­யையோ அல்­லது சாதா­ரண பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரையோ தீர்த்து கட்­டு­வ­தற்கு காலத்தை வீண­டிக்­காது. தன்­னு­டைய பாது­காப்­பிற்கு இவ்­வாறு அஞ்­சு­வ­தா­னது விடு­தலை புலி­க­ளு­ட­னான யுத்­தத்தை முழு­மை­யாக முடிக்­க­வில்லை என்றே அர்த்­த­மாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பல­த­ரப்­பட்ட வழக்கு விசா­ர­ணை­களின் முடிவு விரைவில் கிடைக்க பெறும் போது பாரா­ளு­மன்­றத்தில் கூச்சல் போடு­ப­வர்கள் சிறைச்­சா­லைக்கு செல்லும் காலம் தொலைவில் இல்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பிட்ட கோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தா­வில நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு பிரதி அமைச்சர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தற்­போது குரு­நாகல் மாவட்­டத்தின் சாதா­ரண பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராவார். எனினும் யுத்­தத்தை வெற்­றிக்­கொண்ட தனக்கு இரா­ணுவ பாது­காப்பை கோரு­கின்றார். உலகில் எந்­த­வொரு அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் இரா­ணுவ பாது­காப்பை வழங்க முடி­யாது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருக்கு கூட பொலிஸ் , விசேட அதி­ரடி படை­யி­னரின் பாது­காப்பே வழங்­கப்­பட்­டுள்­ளது. இதன்­பி­ர­காரம் இரா­ணுவ பாது­காப்பு வழங்­கு­வது சட்­ட­வி­ரோ­த­மான செய­லாகும்.

அவ­ரு­டைய பாது­காப்­பிற்­காக 206 பேர் பணி­களில் அமர்த்­தப்­பட்­டுள்­ளனர். முப்­பது வரு­ட­கால யுத்­தத்தை முடிப்­பதில் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­ய­தாகும். எனினும் யுத்தம் பூர­ண­மாக முடி­வ­டைந்து விட்­ட­தா­கவும் விடு­தலை புலிகள் இயக்கம் முழு­மை­யாக அழிக்­கப்­பட்­ட­தா­கவும் மஹிந்த ராஜ­ப­க்ஷவே குறிப்­பிட்­டி­ருந்தார். ஆனால் தற்­போது விடு­தலை புலிகள் அமைப்­பினர் அல்­லது புலம்­பெயர் அமைப்­பினர் தன்னை கொலை செய்­யலாம் என்று கூறு­கின்றார். அவ்­வா­றாயின் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ யுத்­த­ததை 100 வீதம் முழு­மை­யாக முடிக்­க­வில்லை என்றே எமக்கு சந்­தேகம் ஏற்­ப­டு­கின்­றது.

எவ்­வா­றா­யினும் உலகின் பிர­பல தலை­வர்­களில் தற்­போ­தைக்கு ஓய்­வுப்­பெற்­றுள்ள ஜோர்ஜ் டப்­ளயூ புஷ் ,பில் கிளின்டன் போன்­ற­வர்­க­ளுக்கே இல்­லாத இரா­ணுவ பாது­காப்பு மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு எதற்­காக வேண்டும்? தற்­போ­தைக்கு அவர் சாதா­ரண பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராவார். எனவே அவரை கொலை செய்ய வேண்­டிய எந்­த­வொரு தேவைப்­பாடும் புலம்­பெயர் அமைப்­பி­ன­ருக்கு கிடை­யாது. அவ்­வாறு கொலை செய்­யப்­ப­டு­வ­தாயின் ஜன­வரி 8 ஆம் திக­தியோ அல்­லது ஆகஸ்ட் 17 ஆம் திக­திக்கு முன்பே கொலை செய்ய திருக்க வேண்டும்.

உலகின் பலம் வாய்ந்த தீவி­ர­வாத இயக்­கங்­க­ளான ஐ.எஸ், அல் கைதா போன்­ற­வைகள் கூட முன்னாள் ஜனா­தி­ப­தி­யையோ அல்­லது சாதா­ரண பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரையோ தீர்த்து கட்­டு­வ­தற்கு காலத்தை வீண­டிக்­காது.

விடு­தலை புலி­க­ளு­ட­னான போர் 2009 ஆம் ஆண்டு முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டதன் பின்னர் எந்­த­வொரு பிர­புக்­க­ளுக்கும் கொலை செய்­யப்­ப­ட­வில்லை. அவ்­வா­றாயின் மஹிந்த ராஜ­பக்ஷ ஏன் அச்சம் கொள்ள வேண்டும். தற்­போது அவர் சாதா­ரண பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக முடக்­கப்­பட்­டுள்ளார். எனவே இரா­ணுவ பாது­காப்பை மட்டும் கோரு­வதன் கார­ண­மாக பொலி­ஸாரை அவ­ம­திப்­புக்­குள்­ளாக்­கி­யுள்ளார்.

யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்ட வேளை இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சேகா அர­சியல் கைதிகள் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சிறைச்­சா­லை­யி­லேயே அடைத்து வைக்­கப்­பட்டார். அதே­போன்று முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவின் பாது­காப்பும் குறைக்­கப்­பட்­டது. மற்­ற­வர்­க­ளுக்கு செய்த அநி­யாயம் மீளவும் சுற்றி அவ­ரையே தற்­போது தாக்க தொடங்­கி­யுள்­ளது.

தற்­போ­தைக்கு வசீம் தாஜூதீன் ,லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு­கொ­லைகள் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணை­களின் முடி­வுக்கு வர­வுள்­ளன. இதன்­படி விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் அட்­டூ­ழியம் புரிய கூடி­ய­வர்கள் சிறைச்­சா­லைக்கு செல்­வது உறு­தி­யாகும். சிறைச்­சா­லைக்கு செல்லும் நோக்­கத்­து­ட­னேயே பொது எதிரணியினர் இவ்வாறு மிலேச்சத்தனமாக செயற்படுகின்றனர்.

மே தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பலம் குறைவடைந்தமையை அவதானிக்க முடிந்தது. தாம் பஸ் வண்டிகளில் மக்களை அழைத்து வரவில்லை என்றும் இதன்காரணமாகவே பெருமளவிலான மக்கள் வருகை தரவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். அவரது செல்வாக்கு குறைவதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். ஜனாதிபதியாக இருந்தவரை மக்கள் தற்போது சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் என்ற தரத்திற்குள் முடக்கி வைத்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.