யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரால் மே தினப் பேரணி (படங்கள் இணைப்பு)
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து நடத்தும் மே தினப் பேரணி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணியளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்மாகியது.
குறித்த ஊர்வலம் யாழ் பல்கலைக்கழக முன்வீதி ஊடாகச் சென்று, கந்தர் மடம் ஊடாக பலாலி வீதி பரமேஸ்வரா சந்தியை சென்றடைந்து, பின்னர் பல்கலைக்கழகத்தை வந்டைந்தது.
பேரணி நிறைவடைந்தமையின் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் மே தினக் கூட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.











