Breaking News

வசீம் தாஜுதீன் படுகொலை : நாமலிடம் அடுத்தவாரம் விசாரணை ?



பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அடுத்தவாரம் விசாரணைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடமும் அடுத்த வாரத்தில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

புலனாய்வுப் பிரிவினர் தற்போதைக்கு திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

விசாரணைகளில் கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து நாமல் ராஜபக்ஷ மற்றம் அனுர சேனாநாயக்க ஆகியோரை கைது செய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.