Breaking News

ஐ.தே.கவின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் விசனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் நேற்றைய மே தின கூட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வழமையாக மே மாதம் முதலாம் இலங்கையின் பல பாகங்களிலும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். எனினும் இம்முறை இடம்பெற்ற ஐ.தே.க. வின் மே தின நிகழ்வுகளில் ஊடகவியலாளர்களுக்கு சிறிய இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.

இதனால் பல பகுதிகளிலும் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டதால் மக்களுக்கும்,ஊடகவியலாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், அதிகமான மழை பொழிந்தால் ஊடகவியலாளர்களின் காமராக்கள் முற்றாக நனைந்த நிலையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அத்துடன் மழை இடைவிடாது பொழிந்த நிலையில் மேடையில் பாடல்கள் போடப்பட்டு காலம் கடத்தப்பட்டது.

மேலும் பிரதமர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மழை பொழிந்ததால், பிரதமர் மேடையை விட்டு வெளியேறி, மழை தனிந்ததன் பின்னரே மீண்டும் மேடைக்கு வருகை தந்தார். இதனால் ஆதரவாளர்களும், ஊடகவியலாளர்களும் மழையில் நிற்கவேண்டிய நிலை ஏற்ப்பட்டது.

தாம் செய்யும் தொழிலை ஐக்கிய தேசியக் கட்சி கௌரவப்படுத்தவில்லையெனவும், நல்லாட்சியில் ஊடகங்களின் நிலை இதுவா எனவும் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.