Breaking News

ஐ.தே.கவின் கைதியாக சு.க மாரியுள்ளது – மே தினக்கூட்டத்தில் மஹிந்த


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் கைதியாக மாறியுள்ளதால் கட்சியின் அடையாளம் இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிருளப்பனையில் நேற்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனது ஆட்சிக்காலத்தில் அரசாங்கம் வலுவாக இருந்ததாகவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தனது அரசாங்கத்திற்கு எதிராக பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்ததன் மூலம் அரசாங்கத்தை தோற்கடிக்க முடிந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தன்னால் கட்டியெலுப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியினால் தோற்கடித்திருக்க முடியாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்