இளைஞர்களே நீங்கள் இனிமேல் காதலிக்கவும் முடியாது – கிருலப்பனையில் மஹிந்த
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இலவசமாக wifi வழங்குவதாக தெரிவித்தனர். அனால் நாளை முதல் 100 ரூபாய்க்கு தொலைபேசி அட்டை ஒன்றை வாங்கினால், உங்களால் 53 ரூபாய்க்கு மாத்திரமே உரையாடலாம்.
மீதிப் பணம் நீங்கள் அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். அகவே இதன் பின்னர் இளைஞர்களே, யுவதிகளே நீங்கள் காதலிக்கவும் முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்பொழுது கிருலப்பனையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.








