உயிருக்குப் பயந்தோடிய கோட்டாபய வீரவசனம் பேசுகிறார்- இராணுவம் சீற்றம்
கொஸ்கம இராணுவ முகாம் ஆயுத களஞ்சியசாலை தீப்பிடிப்புச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்துக்கு இராணுவத்திலிருந்து பலத்த எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தான் பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் போது இந்த சம்பவம் நடந்திருந்தால் இராணுவத் தளபதி இராஜினாமா செய்திருப்பார் அல்லது அவர் தன்னால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பார் எனவும் அவர் கூறியிருந்தார்.
யுத்த காலத்தில் கேர்ணல் தரத்தில் காணப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, தனது உயிருக்குப் பயந்து இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்ததாக இராணுவ அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், அவர் பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் போதே, வவுனியா மற்றும் கரடியனாறு இராணுவ முகாம்களினுள் இருந்த ஆயுத களஞ்சியசாலை வெடித்துச் சிதறியது எனவும், தற்பொழுது ஒன்றும் தெரியாதவர் போன்று வாய் புலம்புகிறார் எனவும் இராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக முக்கிய அரசியல் கட்சியின் ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.