“நாடு கடந்த தமிழீழ அரசிற்கு– ஐ.நா. அங்கீகாரம்“
நாட்டுக்கு வெளியில் தமிழீழ அரசாங்கம் எனும்
பெயரிலான அமைப்பை ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அரசியல் காரியாலயம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெயரிலான அமைப்பை ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அரசியல் காரியாலயம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் சட்ட ஆலோசகர் வீ. ருத்திரகுமாரன் என்பவரின் தலைமையில் இயங்கும் “நாட்டுக்கு வெளியிலுள்ள தமிழீழ அரசாங்கம்” எனும் அமைப்பின் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாக சுவிட்சர்லாந்தில் வசிக்கும் முருகைய்யா சுஹிந்தன் எனும் புலி ஆதரவாளரை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுஹிந்தன் ஏற்பாடு செய்த இலங்கைக்கு எதிரான ஹைப்ரிட் நீதிமன்றம் அமைக்கும் விசேட கூட்டமொனெ்று நேற்று (22) நண்பகல் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 4 ஆவது இலக்க அறையில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் சர்வதேச சட்டத்தரணிகள் ஆறுபேர் கலந்துகொண்டுள்ளதுடன், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இராணுவ யுத்த மீறல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்ய சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் தேவை என்ற தீர்மானத்தையும் எடுத்துள்ளனர்.
இந்த நாட்டுக்கு வெளியில் தமிழீழ அரசாங்கம் எனும் அமைப்பை ஐ.நா. வில் அங்கீகரிப்பதற்கு முன்னர் ஐ.நா. வின் ஜெனீவா அரசியல் காரியாலயமும் அதன் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இலங்கை அரசாங்கத்தை கலந்தாலோசிக்க வில்லையெனவும் இன்றைய சிங்கள தேசிய நாளிதழ் ஒன்று அறிவித்துள்ளது.








