தாஜுதீன் கொலை: முன்னாள் பொலிஸ் மா அதிபர் விசாரிக்கப்படல் வேண்டும்-பொன்சேகா
வசீம் தாஜுதீன் கொலையை மறைக்க நடவடிக்கை எடுத்தவர்கள் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மீதும் விரல் நீட்டப்படுகின்றது. இவரை விசாரணை செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என தாம் நம்புவதாக அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
வசீம் தாஜுதீன் நாட்டின் ஒரு சொத்தாகக் காணப்பட்ட ஒரு விளையாட்டு வீரர். இவர் மிக மோசமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரின் கொலையை மறைப்பதற்கு தூண்டுதலாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கும் அப்பால் உள்ள முக்கியமானவர்தான் முன்னாள் பொலிஸ் மா அதிபர் எனவும் அவர் மேலும் கூறினார்.
தாஜுதீன் கொலை தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.








