Breaking News

இலங்கை விவகாரங்களில் தலையிட வேண்டாம் - ரஷ்யா வலியுறுத்தல்

ஸ்ரீலங்காவின் உள்விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் போது அதில் வெளியாரின் தலையீடுகள் இருக்க கூடாது என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.


யுத்தக் குற்றங்களுக்கான பொறுப்புகூறல் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் அந்த நாட்டை சர்வதேச சமூகம் பாராட்ட வேண்டும் என ரஷ்யா கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்பட்ட போது ரஷ்ய பிரதிநிதி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

எனினும் ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவை தொடர்பான ஸ்ரீலங்காவின் பொறுப்புக்களில் மேலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே,கானா மற்றும் மசடோனியா உள்ளிட்ட பல நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல்- ஹுசைன், ஸ்ரீலங்கா தொடர்பான தனது வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் உலக நாடுகள் தத்தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளன.