மஹிந்த ஆட்சியில் பயன்படுத்திய 1500 வாகனங்களை காணவில்லையாம்!
கடந்த அரசாங்க காலத்தில் பயன்படுத்திய சுமார் 1500 வாகனங்கள் இன்னும் காணாமல் போன நிலையிலேயே உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதியாளர் சங்கத்துடன் நேற்று (11) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவுக்கு விலை தீர்மானிக்கும் போது வரிகளுடனேயே அது கணக்கிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.