Breaking News

வட்டுவாகலில் வாகன விபத்து : ஒருவர் பலி



முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பாலத்திற்கு அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வட்டுவாகல் பாலத்தில் வேகமாக சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரமொன்றை, மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த நபர் முந்திச் செல்ல முனைந்ததால் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சடலம் தற்போது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.