உணவுவை தவிர்த்தார் கம்மன்பில
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, சிறைச்சாலை உணவுகளை தவிர்த்து, நேற்று முதல் வீட்டிலிருந்து உணவுகளை பெற்று உட்கொண்டு வருவதாக, சிறைச்சாலைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஆவண மோசடி செய்து சொத்துக்களை அபகரித்துக்கொண்டமை தொடர்பிலான குற்றச்சாட்டிற்கு அமைய கைது செய்யப்பட்ட உதய கம்மன்பில, கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உதய கம்மன்பில, கடந்த 18ஆம் திகதி முதல் நேற்று முற்பகல் வரையில் சிறைச்சாலை உணவுகளை உட்கொண்டு வந்த நிலையில், நேற்று முதல் வீட்டிலிருந்து உணவுகளைப் பெற்று உட்கொண்டு வருகின்றார்.
தம்மால் தொடர்ந்தும் சிறைச்சாலை உணவை உட்கொள்ள முடியாது எனவும் வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறும், அவர் விடுத்த கோரிக்கையை சிறைச்சாலை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு இதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
அதுமாத்திரமன்றி மகசீன் சிறைச்சாலையின் ‘ஈ’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவருக்கு, உறங்குவதற்கு பாய் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.








